புதன், 21 ஆகஸ்ட், 2013

இரண்டாம் உலக மகாயுத்தம்: 1939-1945

இரண்டாம் உலக மகாயுத்தம்: 1939-1945

1930 ஆம் ஆண்டின் பின் சர்வாதிகாரியான ஹிட்லர் பலநாடுகளில் தாக்குதல்களை நடத்தில் அந்நாடுகளை தன் வசப்படுத்தினார், அவ் வேளையில் செப்டம்பர் முதலாம் திகதி 1939 ஆம் ஆண்டு ஜெர்மன் படைகள் போலந்து நாட்டை தாக்குதல் நடத்தின, அப்பொழுதே இரண்டாம் உலக மகாயுத்தம் பல மில்லியன் பட்டாளங்களுடன் ஆரம்பமானது. 

ஹிட்லர் போலந்தை 59,000 படை வீரர்களைக் கொண்டு இலகுவில் கைப்பற்றினார். குறைந்த தொழில்நுட்பம் காரணமாகப் போலந்து 900,000 வரையிலான பண்த்தொகையை இழந்தது.

ஹிட்லர் மேலும் நாடுகளைக் கைப்பற்றும் நோக்கைத் தொடர்ந்தார். 

பிரான்சில் நடந்த போரின் போது ஹிட்லர் பிரான்சுவை கைப்பற்றினார். ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி 1939 ஆம் ஆண்டு ஹிட்லர் ஐக்கிய இராச்சியத்திற்கு ஓர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 

பல நாடுகள் தன் வசம் இருப்பதாகவும் ஐக்கிய இராச்சியத்தையும் போரை தடுத்து நிறுத்த தம்மிடம் சரணடையும் படியும் இல்லாவிடின் அவர்கள் மீது படையெடுப்பதாகவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார், எனினும் அக்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சேர்ச்சில் மறுத்துவிட்டார், அன்றிலிருந்தே இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. 

ஐக்கிய இராச்சியப் போர் 1940 ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை முழுவதும் நீடித்தது. 

இறுதியில் யுத்தம் ஜெர்மானிய விமான படைக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. 

மீண்டும் சேர்மனி பின்வாங்கியது. ஹிட்லர் யுத்தத்தில் தோற்றதால் கவலையும் சீற்றமும் அடைந்தார். 

இன்று லண்டன் மீதான ஜெர்மனியின் குண்டுவீச்சுத் தாக்குதல் ஆரம்பமானது ஐக்கிய இராச்சிய விமானம் ஒன்று ஜெர்மானிய நகரம் ஒன்றை தாக்கியது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

ஹிட்லர் சோவியத் யூனியனை தக்குவதற்கு ஆணையிட்டார். 

எனவே ஜெர்மனியப் படைகள் 1941 ஆம் ஆண்டு சூன் மாதம் 22ஆம் திகதி குளிர்காலத்தில் சோவியத் யூனியனை நோக்கிப் புறப்பட்டனர். 

அப்போது ரஷ்யக் குளிர் கடுமையாக இருந்ததால் பல படை வீரர்கள் உறைந்து விட்டனர். 

ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் சோவியத்துகளுடன் நடந்த போர் நடக்கும் வரை சோவியத்துகளை ஹிட்லரின் படை ஒவ்வொரு போரிலும் வென்று கொண்டே சென்றது. 

ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் சோவியத்துகளுடன் நடந்த போர் நடக்கும் முன் ஒவ்வொரு போரிலும் ஒரு ஜெர்மானிய படைவீரன் இறந்தால் அதற்குச் சமனாக 5 சோவியத் யூனியன் படைவீரர்கள் இறந்தனர். 

 எனினும் ஸ்ராலின்கிராட் எனும் இடத்தில் நடந்த யுத்தத்தில் ஒரு சோவியத்து வீரனுக்கு ஒரு ஜெர்மானிய வீரன் என்றே இறப்பு எண்ணிக்கை இருந்தது ஏனேனில் அப்போது ஜெர்மானிய வீரர்களின் எண்ணிக்கையைப்போல் இரு மடங்கு வீரர்களின் எண்ணிக்கை கொண்ட படையை சோவியத் யூனியன் வைத்திருந்தது. 

ஜெர்மானியர்கள் தமது உத்வேகத்தை இழந்தனர். 

பல போர்வீரர்கள் இரந்ததோடு மட்டுமன்றி சிலர் காயமும் அடைந்தனர் அதன் மூலம் சோவியத்துக்களிடம் இருந்து போரிடும் முறையை கற்றுக்கொண்டனர். 

மொத்தமாக சோவியத் யூனியனோடு போர் செய்து 4 மில்லியன் போர் வீரர்கள் வரை இறந்தனர்.

அதன் பின் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, சோவியத் யூனியன் மற்றும் பல்வேறு நாடுகளும் இணைந்து ஜெர்மானிய படைகளை தோற்கடித்தன. 

ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டதொடு யுத்தம் அதே ஆண்டு மே மாதம் எட்டாம் திகதி நிறைவுற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.