புதன், 1 மார்ச், 2017

மாதிரி வினாத்தாள் 2017 பகுதி - 1

புவியியல்

பகுதி - 1
01. தேசப் படத்தின் தந்தை எனக் கருதப்படுபவர் ?
1. அநெக்சிமெண்டர் 2. இரஸ்டோதினிஸ்
3. தொலமி 4. ஹொரொடோடஸ்
5. ஸ்ட்ரோபோ

02. 1: 50000 அளவுத்திட்டத்தில் முழு இலங்கையும் 92 உப பிரிவுகளாக பிரித்து வரையப்பட்டுள்ளது.
அவற்றுள் இல.1 , இல. 92 பிரிவினுள்ளடங்கும் பிரதேசங்கள் முறையே :
1. நெடுந்தீவு, மாத்தறை திஸ்ஸமகாராம 2. பருத்தித்துறை, திஸ்ஸமகாராம
3. யாழ்ப்பாணம், மாத்தறை 4. மானிப்பாய், தங்காலை
5. மானிப்பாய், பருத்தித்துறை

03. 1:25000 என்ற அளவுதிட்டத்தில் வரையப்பட்ட தேசப்படம் ஒன்றில் காட்டப்பட்டுள்ள ஆற்றின் நீளம் எனின் அவ்வாற்றின் உண்மையான நீளம் யாது?

  1. 6km 2. 4km 3. 3km 4. 12km 5. 2km

04. பல்வேறு நதிகளினதும், கிளையாருகளினதும் தலையருவிகளைப் பிரித்து விடும் உயர்நிலத்தில் அமைந்த எல்லை
1. நீரேந்து பிரதேசம் 2.நீர்பிரிமேடு 3.கணவாய் 4.பள்ளத்தாக்கு 5.காற்றிடைவெளி
05. மலைப்பாங்கான பிரதேசத்தில் முன்னர் ஆறு பாய்ந்த இடைவெளி எவ்வாறு அழைக்கப்படும்.
1. காற்றிடைவெளி 2. மலையிடுக்கு
3.வெள்ளச்சமவெளி 4. வறண்ட ஆறு
5.வெற்றுப்பள்ளதாக்கு

06. GIS, GPS என்பவற்றை முதன் முதலில் பயன்படுத்திய நாடுகள் முறையே :
1. யப்பான், ஐக்கிய அமெரிக்கா 2. ஐக்கிய அமெரிக்கா, கனடா
3. கனடா, ஐக்கிய அமெரிக்கா 4. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்
5. கனடா , ஐக்கிய ராச்சியம்

07. எந்த ஆண்டு பரிசோதனைக்காக பத்திற்கு மேற்பட்ட செய்மதிகள் ஏவப்பட்டன.
1. 1973 2. 1983 3. 1985 4. 1993 5. 1999

08. புவியியல் தகவல் முறைமைத் தொழில்நுட்பத்தை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்படும் படத்தின் வகை:
1. எண்ணிலக்கபடங்கள் 2. ஒத்திசைவுப்படங்கள்
3. கைவரைப் படங்கள் 4. முப்பரிமாணப்படங்கள்
5. அச்சிடப்பட்ட படங்கள்
09. புவியியல் சார் அமைவிட முறைமையின் (GPS) உணர்வு திறன் வகைகள் (GPS Recievers) கீழ் வரும் எத் துறையின் மீது அதிக செம்மைத் தன்மைக் கொண்டது?
1. பாதுகாப்புத்துறை 2. நிலஅளவை 3. படமாக்கல் 4. புவிவெளியுருவவியல் சார் படமாக்கல் 5.போக்குவரத்து நகர்ச்சி
10. தொடர்ச்சியற்ற தரவுகளுக்கான உதாரணங்களை மட்டும் கொண்ட விடைத் தொகுதி,
1. குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை,பரீட்சை பெறுபேறுகள், வருமானம்
2. வயது, வருமானம், வெப்பநிலை
3. அசையும் வாகனத்தின் கதி, உயரம், பரீட்சைப் பெறுபேறுகள்
4. வயது, வருமானம், கதி
5. நிறை, வயது, அசையும் வாகனத்தின் கதி

11. தரவுத்தொகுதி ஒன்றில் அதிகூடிய தடவைகள் இடம்பெற்ற பெறுமானம்
1. இடை 2. ஆகாரம் 3. இடையம் 4. சராசரி விலகல் 5. வீச்சு

12. சராசரி விலகல் அளவுகளை வர்கித்துஅவற்றைக் கூட்டி மொத்த உறுப்புக்களால் வகுத்து அவற்றுக்கு வர்க்க மூலம் கான்பதனூடாக பெறப்படுவது
1. இடை 2. காலனை அச்சு 3. திரள் மீடிறன் 4. மொத்த மீடிறன் 5. நியம விலகல்
13. மூடியத்தொகுதிக்கான சிறந்ததொரு உதாரணம்
1.ஞாயிற்றுத்தொகுதி 2.புவித்தொகுதி 3.காற்றுத்தொகுதி
4.வாகனஇயந்திரம் 5.மனித உடல்
14. விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரதான பல்தேசிய கம்பனி
1.சீபா 2.மொன்செண்டோ 3.கார்கில்ஸ் 4.டயூபொன்ட் 5.கெல்ஜின்
15. 1:50,000 இலங்கை இடவிளக்கப்படம் ஒன்றில் குறியீட்டு சமஉயரக் கோடுகளுக்கிடையில் எத்தனை சமஉயரக்கோடுகள் வரையப்படுகின்றன
1. 2 2. 3 3. 4 4. 5 5. 6





புதன்கிழமை