வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

நெப்டியூன்

வாயேஜர் 2 இலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படம்
சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வானியல்அலகு  தூரத்தில் சுற்றுகிறது.

வெள்ளிக்கிழமை


திங்கள், 20 ஆகஸ்ட், 2012

யுரேணஸ்

சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.
யுரேனசு ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

திங்கள்கிழமை


ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

சனி

சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும்.
சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.

சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான 
கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன்.

ஞாயிற்றுக்கிழமை


சனி, 18 ஆகஸ்ட், 2012

வெள்ளி


சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரைனங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.

சனிக்கிழமை


வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

வியாழன்


சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும். சூரிய மண்டலத்தின் உட்கோள்களான (Inner Planets) புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் (Rocky Planets) போன்றில்லாது, புறக்கோள்களில் (Outer Planets) ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. சூரிய சுற்றுப்பாதையில்(Solar Orbit), சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு (Earth Years) ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. சூரிய ஒளியை எதிரொளிக்கும் திறமையில், பூமியின் நிலவு, வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடி்யாக வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை[Mass] பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன். இந்த வளியரக்கனின் நடுவரை விட்டம் (Equatorial Diameter) சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் (Polar Diameter) சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள் (Asteroids'), வால் விண்மீன்கள் (Comets) போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும்(core) கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம்(Great Red Spot) உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது. [மறை] பா • உ • தொ சூரிய மண்டலம்

வெள்ளிக்கிழமை


வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புதன் கோள்


இது 2,439.7 கிமீ ஒரு நில ஆரம் கொண்டு, சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய கிரகமாக இருந்தாலும் இதன் அடர்த்தி 5,515 கிராம்/சதுர சென்டிமீட்டராக உள்ளதுடன் சூரிய மண்டலத்தின் இரண்டாவது அடர்த்தியான கிரகமாக அறியப்படுகிரது. இக்கிரகம் சுமார் 70% உலோகமும் 30% சிலிகேட் பொருள்களையும் கொண்டுள்ளது.

வியாழக்கிழமை