ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

சனி

சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும்.
சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.

சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான 
கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.